உலகம்

மலேசியாவில் பேருந்து விபத்து 11 பேர் பலி!

Sharing is caring!

மலேசியாவில் மழைநீர் கால்வாய் மீது பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்திற்குப்அருகில் இடம்பெற்றுள்ளது.

அந்த விமான நிலையத்தில், பணியாற்றும் பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் 43 பணியாளர்கள் இருந்த நிலையில் 5 வங்கதேச ஆண்கள், 2 நேபாள ஆண்கள் மற்றும் 3 இந்தோனேசிய பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

l
%d bloggers like this: