உலகம்

சீனாவில் ஏரியில் விழுந்த பேருந்து, 21 பேர் பலி

Sharing is caring!

தென்மேற்கு சீனாவின் குய்ஜோ மாகாணத்தில் அன்ஷுன் நகரில் உள்ள உள்ளூர் நீர்த்தேக்கத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, கல்லூரி நுழைவுத் தேர்வின் முதல் நாளில் ஒரு பேருந்து விழுந்து குறைந்தது 21 பேர் பலியாகயுள்ளனர்.

பேருந்தில் இருந்த 18 பயணிகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர், அவர்களில் இருவர் உயிரிழந்தனர் என்று Guizhou Daily தகவல் கொடுத்துள்ளது. 

உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை, மேலும் உள்ளூர் அதிகாரிகள் இன்னும் பாதிக்கப்பட்டவர்களை மீட்க வேலை செய்து வருகின்றனர்.

இந்த பயணிகள், வாழ்க்கை மாறும் கல்லூரி நுழைவுத் தேர்வு எழுத இருக்கும் மூத்த உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஆகும்.

l
%d bloggers like this: