உலகம்

குரங்குகளால் பறிக்கப்பட்ட தேங்காயில் செய்யப்பட்ட பொருட்களை விற்பதை பல்பொருள் அங்காடிகள் நிறுத்தியுள்ளன

Sharing is caring!

இங்கிலாந்தில் உள்ள பல சூப்பர் மார்க்கெட்டுகளில், குரங்குகளால் பறிக்கப்பட்ட தேங்காய்களால் தயாரிக்கப்பட்ட, இளநீர் மற்றும் தேங்காய் எண்ணெய்யை, அவற்றின் அலமாரிகளில் இருந்து அகற்றியுள்ளனர்.

shallow focus photo of brown monkey

குரங்குகள் காட்டில் இருந்து கடத்தப்பட்டு, ஒரு நாளைக்கு 1,000 தேங்காய்கள் வரை எடுக்க பயிற்சி அளிக்கப்படுகின்றன என்று PETA அமைப்பு முறைப்பாடு செய்துள்ளது.

தாய்லாந்தில் குரங்குகள் “தேங்காய் பறிக்கும் இயந்திரங்கள்” போல் நடத்தப்பட்டுள்ளதாக விலங்கு உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் ஏற்றுமதிக்காக தேங்காய்களை பறிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள குரங்குகளை, தாய்லாந்தில் எட்டு பண்ணைகளில் கண்டுபிடித்துள்ளதாக PETA கூறியுள்ளது.

ஆண் குரங்குகள் ஒரு நாளைக்கு 1,000 தேங்காய்களை பறிக்கும் என்று என்று PETA கூறுகிறது. ஆனால் ஒரு மனிதனால் 80 தேங்காய்கள் தான் பறிக்க முடியும் என்று கூறுகிறது.

l
%d bloggers like this: