இலங்கை

வந்தாறுமூலையில் 3 மோட்டார் சைக்கிள்கள் கோர விபத்து!

Sharing is caring!

மட்டக்களப்பில் வந்தாறுமூலை பகுதியில் நேற்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வந்தாறுமூலை சந்தைக்கு அருகில் மூன்று மோட்டார் சைக்கிள்கள்  ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒருவர் தீயில் கருகி உயிரிழந்தார்.

மேலும் மூன்று பேர் இந்த விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்னர்.

குறித்த விபத்து நேற்றிரவு  7.30 மணியளவில் இடம்பெற்றதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் வேப்பவுஸ் வீதி பலாச்சோலை வந்தாறுமூலையைச் சேர்ந்த 22 வயதுடைய மோகன் மயூரன், வேப்பவுஸ் 3 ம் குறுக்கு வீதி பலாச்சோலை வந்தாறுமூலையைச் சேர்ந்த 23 வயதுடைய முருகுப்பிள்ளை பவித்திரன் ஆகியோர் இறந்ததுடன் தீப்பற்றி எரிந்தவர் அடையாளம் காணப்படவில்லை .

l
%d bloggers like this: