இலங்கை

மானிப்பாயில் 8 பேர் கைது!

Sharing is caring!

யாழ் மானிப்பாய்‌ பகுதியில்‌ அண்மையில்‌ நடந்த வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் 8 பேர்‌ கைது செய்யப்பட்டுள்ளனர்‌.

மானிப்பாய்‌ காவற்துறை பொறுப்பதிகாரி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்‌.

குறித்த நபர்கள் வாள்‌வெட்டு சம்பவங்களுக்கு செல்லும்‌ போது சுழியோடி கண்ணாடியை அணிந்தவாறு செல்வது அவர்களின் கைபேசியில்‌ மீட்ட புகைப்படங்கள்‌ மூலம்‌ தெரியவந்துள்ளது.

அவர்களிடமிருந்து 3 வாள்கள்‌, 1 சுழியோடிக்‌ கண்ணாடி மற்றும்‌ 2 உந்துருளிகள்‌ கைப்பற்றப்பட்டன.

l
%d bloggers like this: