இலங்கை

சுற்றுலாவுக்காக விமான நிலையங்களை மீண்டும் திறப்பதில் இலங்கை அரசு தாமதம்

Sharing is caring!

vehicle parked near plane

நாட்டில் சர்வதேச விமான நிலையங்களை மீண்டும் திறப்பதை தாமதப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. COVID-19 தொற்று அதிகரிப்பு காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை திருப்பி மீள கொண்டு வருவதை தற்காலிகமாக நிறுத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் அண்மையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் பற்றாக்குறை இருப்பதால் தாயகம் திரும்புவதற்கான நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

“பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவை அரசு எடுத்துள்ளது. சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, சுற்றுலாவிமான நிலையங்கள் மீண்டும் திறப்பதை தாமதப்படுத்த திட்டமிட்டுள்ளோம்” என்று அவர் கூறினார்.

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள் தாயகம் திரும்புவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளனர் என அமைச்சர் ரணதுங்க தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர்கள் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் கீழ் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

l
%d bloggers like this: