இலங்கை

கத்தாரில் படுகொலை செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இலங்கையர்களின் சடலங்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன

Sharing is caring!

கத்தாரில் படுகொலை செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று இலங்கையர்களின் சடலங்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் 59 வயதுடைய ஆண், 55 வயதுடைய பெண் மற்றும் அவர்களின் 34 வயது மகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மார்ச் 1ம் திகதி இந்த கொலைகள் நடந்தன மற்றும் COVID19 கட்டுப்பாடுகள் காரணமாக சடலங்களை திரும்ப பெற கிட்டத்தட்ட 4 மாதங்கள் ஆனது.

இலங்கையில் வசிக்கும் உயிரிழந்த தம்பதிகளின் மற்றுமொரு மகள், தனது குடும்பம் தொண்டையில் வெட்டுக்காயத்தால் கொல்லப்பட்டுள்ளதாக தனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக ஊடகங்களுக்கு த் தெரிவித்தார்.

இந்தக் கொலைகளுக்கு கட்டாரில் வசித்து வந்த இலங்கையர் ஒருவர் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கொலைக்கான காரணம் நியாயமான விசாரணை முடிந்த பின்னர் தெரியவரும் என உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

l
%d bloggers like this: