இலங்கை

ஒவ்வொரு வீடுகளிலும் 2 மின் விளக்குளை அணைப்பதற்கு ரவி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

Sharing is caring!

மின்வலு, எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்கவால் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ள உண்மைகள் பின்வருமாறு:

வரவிருக்கும் மூன்று மாதங்களில் ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு விளக்குகளை அணைக்க வேண்டும்.

அரச நிறுவனங்கள், மத மற்றும் வணிக இடங்களில் 10% மின்சார நுகர்வை குறைத்தல்.

தேவையற்ற தெரு விளக்குகளை நிறுத்துதல்.

சாதாரண நாட்களில் வழக்கமான நேரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் எல்லா தெரு விளக்குகளையும் அணைத்தல்.

அதன்படி மின்சாரம் வழமைக்கு திரும்பும் வரை சிக்கனமாக மின்சாரம் பயன்படுத்துவதைப் பற்றி பொதுமக்கள் மற்றும் நிறுவனங்க்களுக்கு விழிப்புணர்வு அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

l
%d bloggers like this: