இலங்கை

இந்த மதுரை தேநீர் கடை உண்ணக்கூடிய கப்பில் தேநீர் பரிமாறுகிறது

Sharing is caring!

சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பரவ, உலகம் முழுவதும் உள்ள மக்கள் பிளாஸ்டிக் பாவனைக்கு பதிலாக புதுமையான வழிகளை கண்டுபிடித்து வருகின்றனர்.

மதுரையில் உள்ள இந்த சிறிய தேநீர் கடை இதற்கு ஒரு அருமையான உதாரணம்.

பிளாஸ்டிக் கப்புகளுக்கு பதிலாக, இந்த கடை சாக்லேட் பிஸ்கட்டுகளால் செய்யப்பட்ட கப்களில் டீ பரிமாறுகிறது.

விலை ₹20, ஒவ்வொரு கப்புகளிலும் 10 நிமிடங்கள் 60 ml சூடான தேநீர் வைத்திருக்கலாம் – பொதுவாக மக்கள் தேநீர் முடிக்க எடுக்கும் நேரம். பிறகு பிஸ்கட் கப் உள்ளே நன்றாக தோய்ந்து இருக்கும், டீயில் நனைத்த பிஸ்கட் போல சுவை இருக்கும்.

ஜூன் 15-ம் தேதி முதல் கடை திறக்கப்பட்டதில் இருந்து குறைந்தபட்சம் 500 கப்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடை உரிமையாளர் விவேக் சபாபதி, பிளாஸ்டிக் கோப்பைகளுக்கு நிலையான மாற்று ஒன்றைத் தேடி ஒரு வருடம் செலவழித்தார்.

பிளாஸ்டிக் கழிவுகளை குறைப்பதில் தங்களுக்கு உதவும் இந்த புதுமையை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

l
%d bloggers like this: