இந்தியா

ரபேல் போர் விமானத்தை வாங்கிய ராஜ்நாத்

Sharing is caring!

பாரீசில் இந்திய விமானப்படைக்கு வாங்ககிய 36 ரபேல் போர் விமானங்களில், முதல் விமானத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றுக்கொண்டார்.

இந்திய விமானப்படைக்கு, 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க, பிரான்சுடன், 2016 செப்டம்பரில், 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதற்கமைய, பிரான்ஸ் நாட்டின், ‘டசால்ட் ஏவியேஷன்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த போர் விமானத்தின், முதல் விமானம், இன்று (அக்.,8ம் தேதி) ஒப்படைக்கப்பட்டது.

முதலில் 4 போர் விமானங்கள் 2020ம் ஆண்டு மே மாத இறுதியில் இந்தியா வர உள்ளன. இவ்விமானங்கள், ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தில் நிறுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

l
%d bloggers like this: