இந்தியா

நவீன உடைகளை அணிய மற்றும் மது அருந்த மறுத்த மனைவிக்கு முத்தலாக் கொடுத்த கணவர்

Sharing is caring!

பாட்னா : மது அருந்தி, நவீன உடைகளை அணிய மறுத்த மனைவியை, அவரது கணவர் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த சம்பவம் பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்துள்ளது.

பீகாரில் வசித்து வரும் பெண் நூரி பாத்திமாக்கு, 2015 ல் இம்ரான் முஸ்தபா என்பவருடன் திருமணம் நடந்தது.  சில நாட்கள் பின் இந்த தம்பதி டெல்லிக்கு இடம் பெயர்ந்தனர்.

அப்போது அங்கு இருக்கும் நவீன பெண்களை பார்த்த முஸ்தபா, தனது மனைவியையும் அவர்களைப்போன்று நவீனமாக மாற வற்புறுத்தியுள்ளார்.

சிறிய ஆடைகளை அணியவும், மது அருந்தும்படியும் தொல்லை கொடுத்துள்ளார்.  இதற்கு மனைவி மறுப்பு தெரிவித்ததால், முஸ்தபா அவருடன் தினமும் சண்டையிட்டு வந்தார்.

கடந்த 2 வருடங்க்களாக இக்கொடுமை நடைபெற்று வந்த நிலையில், தனது மனைவிக்கு முஸ்தபா முத்தலாக் கூறி வீட்டை விட்டு வெளியேறும்படி கூறியுள்ளார்.

இதை அப்பெண், காவல்நிலையத்திலும் ம்ற்றும் மாநில மகளீர் ஆணையத்திடமும் புகார் அளித்தார். புகாரின் பேரில் முஸ்தபாவிற்கு உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது.

l
%d bloggers like this: