இந்தியா

கொரோனா காலத்தில் பானி பூரிக்கு ஏங்குகிறீர்களா? இந்த ‘ATM’ உங்களுக்கு சேவை செய்ய உள்ளது

Sharing is caring!

உங்களுக்கு கொரோனா காலத்தில் பானி பூரி சாப்பிட கிடைக்கவில்லை என்றால், இந்த பானி பூரி டிஸ்பென்சர் உங்கள் உதவிக்கு வந்துவிட்டது. 

பானி பூரி, இது இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் தெரு உணவுகளில் ஒன்றாகும். மேலும், பானி பூரி வண்டிகள் லாக் டவுன் காலத்தில், ஒரு புது கண்டுபிடிப்பை தூண்டியுள்ளது.

குஜராத் மாநிலம் பனஸ்காண்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், ‘காண்டாக்ட்லெஸ் பானி பூரி’ இயந்திரத்தை உருவாக்கியுள்ளார். 

இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் ஒரு நபர் ஒரு விலையைத் தேர்ந்தெடுத்து, பின்னர் ஸ்லாட்டில் 20 ரூபாய் நோட்டை செருகுகிறார். சிறிது நேரம் காத்திருந்து, விசைப்பலகைக்கு கீழே ஒரு மடல் திறக்கிறது மற்றும் பானி பூரிகள் ஒரு சிறிய கன்வேயர் பெல்டில் வெளியே வருகின்றன. 

வடிவமைப்புக்கு ஆறு மாதங்கள் எடுத்த இந்த இயந்திரம், சமூக வலைததளங்களில் மிகவும் பிரபலமானது.

அசாம் போலீஸ் கூடுதல் இயக்குநர் (ஏடிஜிபி), ஹர்தி சிங், இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட பலரில் ஒருவர் ஆகும்.

l
%d bloggers like this: