சினிமா

விஷால் தயாரிக்கும் ‘இரும்புத்திரை 2’

Sharing is caring!

நடிகர் விஷால் நடித்து மற்றும் தயாரிக்க ‘இரும்புத்திரை 2’ திரைப்படம் உருவாகவுள்ளது. ஆனால், மித்ரன் இப்படத்தை இயக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

2018 ல் விஷால் நடித்து, தயாரித்து ஆண்டு வெளியான படம் ‘இரும்புத்திரை’. மித்ரன் இயக்கிய இப்படத்தில் அர்ஜுன், சமந்தா, டெல்லி கணேஷ் போன்ற பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இப்படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

Vishal Irumbu Thirai 2
Vishal Irumbu Thirai

விமர்சனத்திலும், வசூலிலும் விஷாலுக்கு ஒரு வெற்றிப் படமாக ‘இரும்புத்திரை’ அமைந்தது. அதனால் ‘இரும்புத்திரை 2’ படத்தை தயாரித்து, நடிக்க விஷால் திட்டமிட்டுள்ளார்.

இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. இப்போது அதற்கான ஆரம்ப பணிகள் அவசரமாக நடைபெற்று வருகிறது.

l
%d bloggers like this: